ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது அர்ஜூனவிற்கு எதிரான வழக்கு விசாரணை!!!

Published By: Digital Desk 7

04 Dec, 2018 | 12:49 PM
image

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்திற்குள் சென்று பணியாளர்களுக்கு தாக்கி கலகத்தை விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டார் என அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அர்ஜூனவின் மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவனரால்  கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் அர்ஜூன ரணதுங்க 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந் நிலையிலேயே அர்ஜூன மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட்ட போது கொழும்பு மஜிஸ்திரேட் குறித்த வழக்கு விசாரணையை எதிர் வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07