நிதி மோசடி குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கு விசாரணை இன்று கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.