இந்தியாவின் பெங்களுர் பல்கலைக்கழக புவியியல், புவித்தகவல் தொழில்நுட்பத் துறையில் (Bangalore University Geography & Geoinformatics) அலுவலகத்தினை கொண்டு இயங்கும் சர்வதேச கல்வி அமையத்தில் பதிவுபெற்ற புவியியல் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் அமையத்தின் (Union of Geographic Information Technologists-UGIT ) 7 ஆவது சர்வதேச மகாநாடு நவம்பர் 24-25, 2018 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. 

இதில் 2018 ஆண்டிற்கான உயர் புலமையாளர் விருதுக்கு (UGIT’s Excellency Award-2018) இந்தியா,  இலங்கையிலிருந்து  ஐவர் தெரிவாகியிருந்தனர். 

இதில் இலங்கையில் பேராதனைப்  பல்கலைக்கழக புவியியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர் K.W.G. Rekha Nianthi, கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  பணிபுரியும் கலாநிதி க. இராஜேந்திரம் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர். Prof. Rekha Nianthi தனது PhD பட்டத்தினை, இந்தியாவின் NEHU பல்கலைக்கழகத்திலும் MSc. பட்டத்தினை    தாய்லாந்தின் AIT இலும் பெற்றவர். 

கலாநிதி இராஜேந்திரம்  தனது PhD பட்டத்தினை  புதுடில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் MPhil.   பட்டத்தினை யாழ்-பல்கலைக்கழகத்திலும்  ஆசிய பசுபிக் நாடுகளின் விஞ்ஞான தொழில்நுட்ப நிலையத்தின் ஆய்வுக்கான புலமைப் பரிசில் பெற்று  புவியியல் தகவல் ஒழங்கு மற்றும் தொலையுணர்வு  நுட்பத்தில் பட்டப்பின் டிப்ளோமாவினை IIRS இல் பெற்றவர்.