2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ள அணி வீரர்களை ஏலத்தில் தெரிவு செய்யும் நடவடிக்கைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக எதிர்வரும் 18 ஆம் திகதி ஜெய்பூரில் ஐ.பி.எல்.வீரர்களை தெரிவு செய்யும் ஏலம் இடம்பெறவுள்ளது. 

இம்முறை ஏலத்துக்காக மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 50 வீரர்களும் இந்தியாவுக்குள்ளும், 20 வீரர்கள் ஏனைய நாடுகளிலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11 வீரர்களை ஏற்கெனவே விடுவித்துள்ளது. மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 வீரர்களைத் தக்கவைத்ததால் 2 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடியும். 

அத்துடன் கொல்கத்தா அணி சில அயல்நாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 இந்திய வீரர்கள் 2 அயல்நாட்டு வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளது.

இம்முறை இங்கிலாந்து, அவுஸ்திரேலிய வீரர்களுக்கு ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. 

இந் நிலையில் ஐ.பி.எல். 2019 போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா இல்லையா என்பது இன்னும் முடிவாகாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.