ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தின் பின் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்களை அம்பலப்படுத்திய நாமல் குமாரவின் ஏற்பாட்டில் எதிர் வரும் 5ஆம் திகதி காலை 10.30 மணியளவில் அம்பாறை பஸ் தரிபிப்பிடத்திற்கருகில் மக்கள் எழுச்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இம் மக்கள் எழுச்சி கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாமல் குமார,

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி திட்டம் தொடர்பில் இது வரையில் வெளிப்படுத்தாத தகவல்களை இம் மக்கள் எழுச்சி கூட்டத்தில் கூறப்போவதாகவும் 

மேலும் இம் மக்கள் எழுச்சி கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் பிக்குகள் சிலரும் மஹாஓய ஆதிவாசிகளின் பிரதிநிதி ஒருவரும் உரையாற்றவுள்ளனர் எனவும் நாமல் குமார தெரிவித்தார்.