சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை  இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த இரு சந்தேக நபர்களை  சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 48 மற்றும் 46 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்கள் சவூதி அரேபியாவிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், அவர்களின் பயணப் பொதியை சோதனையிட்டபோது ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுக்களை மீட்டுள்ளனர். 

 

242 பொதிகளில் சுமார் 26 இலட்சத்து 62 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 48 ஆயிரத்து 400 சிகரெட் பக்கற்றுக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்னர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.