இஸ்ரேலில் பழமை வாய்ந்த துறைமுகம் ஒன்றின் அருகில் இருந்து தகங்க நாணயங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.சுமார்  900 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கிணறு அருகே கற்களுக்கு நடுவே இருந்த வெண்கல பானையில்  இந்த நாணயங்கள் காசுகள் கிடைத்துள்ளது.

இவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் மறுபடியும்  எடுத்துக் கொள்ளலாம் என்ற நோக்கில் மறைத்து வைத்திருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.எனினும் குறித்த தங்க நாணயங்களை மறுபடி எடுக்கப்படவில்லை. 1101ஆம் ஆண்டு இந்த பகுதியில் நடந்த போரில் சிலுவை படையால் இதனை புதைத்து வைத்தவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள்.