26 வயதுடைய யுவதி ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்ற 50 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், குறித்த யுவதியை அச்சுறுத்தி பதிவு திருமணம் செய்துள்ள சம்பவம் அல­வத்­து­கொடை, கொன­கல்­கலை பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, வேன் ஒன்றில் ஐந்து நபர்களுடன் வந்த சந்தேக நபர் பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று இவ்வாறு திருமணம் செய்துள்ளார்.

இதன்பின்னர் பெண்ணை  தம்­புள்ளை கண்­ட­லம பகுதியில் தடுத்து வைத்திருந்துள்ளனர். மறுதினம் பெண்ணை கடத்திய இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

தம்புளை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்து பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.