(லியோ நிரோஷ தர்ஷன்)

அமெரிக்காவின்  7 ஆவது கப்பற்படையணியான யு.எஸ்.எஸ்.புளு ரிட்ஜ் (எல்.சி.சி.19) இலங்கை வந்துள்ளது. 

2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்க கடற்படையின் போர் கப்பல் இதுவாகும். 

அமெரிக்க மற்றும் இலங்கைக்கு இடையிலான சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் கூட்டு பயிற்சிகளில் ஈடுப்படல் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இந்த போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. 

மேலும் கடற்கொள்ளை சம்பங்களுக்கு எதிராக செயற்படுதல் , மனித நேய உதவிகளை வழங்குதல் போன்ற விடயங்களை மையப்படுத்தி கடந்த மாதம் வொ~pங்டனில் நடைப்பெற்ற இரு நாட்டு கலந்துரையாடலின் ஒரு கட்டமாகவே இந்த விஜயம் அமைந்துள்ளது. 

அமெரிக்காவின்  7 ஆவது கப்பற்படையணியான யூ.எஸ்.எஸ்.புளு ரிட்ஜ் (எல்.சி.சி.19) இந்த போர் கப்பலில் 900 மாலுமிகள் உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் காணப்படுகின்றனர். கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரால் ஜோசப் கெயின் கட்டுப்பாட்டில் புளு ரிட்ஜ் போர் கப்பல் இலங்கை வந்துள்ளது.