'பிளேபோய்' பத்திரிகையின் நிறுவனரான ஹெப்னரின் 14 காரட் வயாகரா தங்க மோதிரம் 22 ஆயிரத்து 400 டொருக்கு வில‍ைபோயுள்ளது. 

உலகின் முன்னணிகவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர், கடந்த ஆண்டு, தனது 91 ஆவது வயதில் காலமானார்.

இதையடுத்து அவர் பயன்படுத்திய பொருட்கள் மட்டுமல்லாது குறித்த பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவயைும் ஏலத்துக்கு விடப்பட்டன.

இந் நிலையில் அவர் பயன்படுத்திய ‘வயாகரா’ மாத்திரையை மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டிருந்த 14 காரட் தங்க மோதிரம், 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போயுள்ளது.

அத்துடன் ஹொலிவுட்டின் கவர்ச்சிப் புயல் மர்லின் மன்றோவின் அட்டைப்படத்துடனான பிளேபோய் பத்திரிகையின் முதல் இதழின் பிரதி 31 ஆயித்து 25 டொலருக்கும், முதல் இதழ் கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்திய தட்டச்சு இயந்திரம், 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 டாலருக்கு விலைபோயிருந்தமை குறிப்பிடத்தக்கது.