பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள்,மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் தொடர்பில் நாட்டில் முன்னணி வர்த்தக நாமமான ‘ரியசக்வல’ ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விசேட வசதிகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன.இதுவரை இந்நாட்டில் நிதித் துறையில் முன்னணி நிறுவனமாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள ஒரியன்ட் பினான்ஸ் நிறுவனம் அண்மையில் ‘ரியசக்வல’வுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது. 

பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளை விற்பனைசெய்யும்போது அல்லது பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டியை ‘ரியசக்வல’வில் கொள்வனவு செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகையை வழங்குவது தொடர்பிலேயே இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

டேவிட் பீரிஸ் குழுமத்தின் உறுப்பு நிறுவனமான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல் (பிரைவட்) லிமிட்டட்டின் கீழ் செயற்படும் ‘ரியசக்வல’ பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதில் நீண்டகாலமாக மக்கள் நம்பிக்கையைப் பெற்ற முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. விசேடமாக உங்களது முச்சக்கரவண்டி அல்லது மோட்டார் சைக்கிளை கூடிய விலையில் விற்பனை செய்வதற்கு,பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டி அல்லது மோட்டார் சைக்கிளை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கு அல்லது பரிமாறிக் கொள்வதற்கு சிறந்த

இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெரும்பாலானவர்களுக்கு காணப்படும் பிரச்சினை என்னவெனில்ரூபவ் தமது முச்சக்கரவண்டியை விற்பனை செய்யவேண்டிய தேவை இருந்தாலும் அதனைக் கொள்வனவு செய்வதற்காகப் பெற்றுக்கொண்ட நிதி வசதிகளை செலுத்தி முடிக்க இயலாதமையால் புதிய வாகனத்தைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளது. 

‘ரியசக்வல’ மற்றும் ஒரியன்ட் பினான்ஸ் ஒப்பந்தத்துக்கு அமையரூபவ் வாடிக்கையாளர்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறது. இதில்

முச்சக்கரவண்டிக்காக பெற்ற கடன் அல்லத ஏனைய நிதி வசதிகளை மீண்டும் செலுத்தி முடிக்க இயலாவிட்டால் அதனைப் பூர்த்திசெய்து ‘ரியசக்வல’வுக்கு உங்கள் வாகனத்தை விற்பனை செய்ய வழியை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

உங்களக்கு வேறு முச்சக்கரவண்டிக்குச் செல்லவேண்டுமாயின் அதற்கான நிதி வசதிகளைச் செய்ய ஓரியன்ட்

பினான்ஸ் தயாராக உள்ளது. இதன்போது நீங்கள் எந்த நிறுவனத்தின் நிதியுதவியுடன் முச்சக்கரவண்டியை

கொள்வனவு செய்திருந்தாலும் உங்களால் செலுத்த முடியாத பணத்தை குறித்த நிறுவனத்துக்கு செலுத்தி ‘ரியசக்வல’வுக்கு

முச்சக்கரவண்டியை விற்பனை செய்யலாம். ஆத்துடன் வாடிக்கையாளர் கொள்வனவு செய்யும் புதிய அல்லது

பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிக்கு நிதி வதிகளும் ஏற்றபடுத்திக் கொடுக்கப்படும். அது மாத்திரமன்றி

விசேட வட்டி மற்றும் சலுகைகளின் அடிப்படையில் உங்களுக்கு வாகனத்தை ‘ரியசக்வல’விடமே விற்பனை செய்து

மீண்டும் புதிய அல்லது புதிவுசெய்யப்பட்ட வாகனத்தைக் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

‘ரியசக்வல’ காரியாலயம் மற்றும் வாகனப் பிரிவு இல 137ரூபவ் பத்தரமுல்லை-பன்னிப்பிட்டிய வீதி என்ற முகவரியில் உள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடட் நிறுவனத்துக்கு முன்னால் அமைந்துள்ளது. 

அது மாத்திரமன்றி நாடு முழுவதிலும் உள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடட் கிளைகளில் இணைந்ததாக ‘ரியசக்வல’வின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் நீங்கள் நாட்டின் எப்பாகத்திலிருந்தாலும் ஒரு சில வினாடிகளில் இதன் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.