கிளிநொச்சி, முரசு மோட்டைப் பகுதியில் வர்த்தக நிலையமொன்று உடைக்கப்பட்டு 65 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், பொருட்கள், ஆவணங்கள் பலவும் சூறையாடப்பட்டுள்ளது.

குறித்த இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி, முரசுமோட்டை முருகானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள விவசாய மருந்துகள் மற்றும் உரம்  விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திலேயே மேற்படி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.