வவுணதீவில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரை மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.