கடந்த வாரம் வெளியிடப்பட்ட சாதாரணதர பெறுபேறுகள் திருப்தியின்மையால் மற்றுமொரு தமிழ் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கிரிஎல்ல,  கலதுரவத்த,  மடபத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான அசோகநாதன் - வாசப்பிரியா என்ற 16 வயது மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கிரிஎல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி குறித்த மாணவியின் பெற்றோர்கள் தொழிலுக்கு சென்ற பின்னர் தனது அறையில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும்,ஒரு இளைய சகோதரரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.