இஸ்லாமிய ஜிகாத் குழு இலங்கையில் செயற்படவில்லை என்று இலங்கையை மையமாகக் கொண்ட சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் (International Centre for Ethnic Studies) தெரிவித்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முறைப்பாடுகளின் பின்னரே இதற்கான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஜிகாத் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2012ஆம் ஆண்டில் புள்ளிவிபரப்படி நாட்டின் மொத்த சனத்தொகையில் 9.67 வீதமானோர் முஸ்லிம்களாவர். அதேபோன்று கிழக்கின் சனத்தொகையில் 37 வீதமானோர் முஸ்லிம்களாவர்.

இந்தநிலையில் இலங்கையில் தாப்லிகி ஜமாத், தாவீத் மற்றும் சுபி ஆகிய குழுக்கள் 1950ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன.

எனினும் இவை உள்ளுர் பள்ளிவாசல்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றன. இதிலும் சுபி அமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.