தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Huawei, ‘Huawei Lanka IT Congress 2018 - Intelligent IT Inspires Digital Future’என்ற தொனிப்பொருளில் இலங்கையில் முதன்முறையாக இடம்பெற்ற Huawei தகவல் தொழில்நுட்ப மாநாட்டை அண்மையில் நடாத்தியுள்ளது.

தனது பங்காளர்கள் மீது Huawei காண்பிக்கும் தீவிரமான அர்ப்பணிப்பு,இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சூழல்தொகுதி மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற பேராவல் ஆகியவற்றை இந்நிகழ்வு வெளிக்காண்பித்துள்ளதுடன்,முன்னணிப் பங்காளர்கள்,தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வங்கிச்சேவை மற்றும் நிதி,அரச துறையின் முக்கிய பொது ஸ்தாபனங்கள் போன்ற பல்வேறு துறைகளையும் சார்ந்த நிறுவனங்கள் மத்தியிலிருந்து 500 இற்கும் மேற்பட்ட சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளை இந்நிகழ்வு ஒன்று சேர்த்திருந்தது. 

தொழில்நுட்பங்கள்,தகவல் தொழில்நுட்ப போக்குகள், தொழிற்துறை தொடர்பான ஆழமான அறிவு,Huawei இன் அதிநவீன தகவல் தொழில்நுட்ப தீர்வுகளின் அறிமுகம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் Huawei  இன் தொழில்நுட்பரீதியான புத்தாக்கங்கள் ஆகியன இந்நிகழ்வில் இடம்பெற்றன. 

இலங்கையிலுள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தொழிற்துறையைச் சார்ந்த அனைவரும் தமக்கிடையில் தொடர்பாடல்களை ஏற்படுத்தி, விடயங்களைப் பகிர்ந்து,தமக்கிடையில் ஊக்குவிப்பை ஏற்படுத்திரூபவ் டிஜிட்டல் மாற்றத்தின் வெற்றியை கூட்டாக வெளிக்கொண்டு வருவதற்குத் தேவையான ஒரு மேடையை உருவாக்கும் வாய்ப்பினையும் இந்நிகழ்வு அவர்களுக்கு வழங்கியுள்ளது. 

வினைதிறனை மேம்படுத்தும் புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவித்தல் மற்றும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI)ஆற்றல்களைக் கொண்ட பகிரங்கரூபவ் சுறுசுறுப்பான மற்றும் தயார்படுத்தப்பட்ட தளமேடைகளை தழுவிக்கொள்ளுதல் ஆகியவற்றினூடாக எவ்வாறு டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பது என்பது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் துறை சார் தலைமை அதிகாரிகள் இந்நிகழ்வில் தமக்கிடையில் கலந்துரையாடலில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

Huawei Technologies Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷண்லி வோங் அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,“இம்மாநாட்டின் மூலமாக,தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகியன துறைகளைச் சார்ந்த அனைவருடனும் ஈடுபாடுகளை முன்னெடுக்கும் வாய்ப்பினை Huawei பெற்றுக்கொண்டதுடன், இலங்கையில் டிஜிட்டல் மாற்றம் தொடர்பில் பகிரங்கமான மற்றும் காத்திரமான உரையாடலை முன்னெடுத்து இம்மாற்றத்தின் உச்சப் பயனை அடைந்து கொள்வதற்கு தனது முழுமையான தகவல் தொழில்நுட்ப உற்பத்தி வரிசையை உபயோகிப்பதில் Huawei எவ்வாறு ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்பது தொடர்பான சிந்தனைகளும் முன்வைக்கப்பட்டன,” என்று குறிப்பிட்டார்.

சாதனங்கள்,வலையமைப்புக்கள் மற்றும் cloud தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கிடையில் மகத்தான ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கின்ற பகிரங்க,நெகிழ்வுப்போக்குடைய மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு தளமேடைகளை வழங்கி நிறுவனங்களும், தொழிற்துறைகளும் டிஜிட்டல் ரீதியாக மாற்றம் பெறுவதற்கு Huawei உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் மாற்றம் தொடர்பில் நிறுவனத்தின் ஆதரவிற்கான உறுதிமொழியை வழங்கிய அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷண்லி வோங் அவர்கள் கூறுகையில்,

“வலுவான தொழிற்துறை முன்னெடுப்புக்கள், திறமை கொண்ட வேலைப்படை மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட அரசாங்கம் ஆகியவற்றுடன்,வளர்ச்சிக்கான உந்துசக்தியாக டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதற்கு Huawei மற்றும் ஏற்கனவே தொழிற்துறைகளுக்கு உதவி வருகின்ற நிறுவனத்தின் உள்நாட்டுப் பங்காளர்களின் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்,” என்று குறிப்பிட்டார்.

உலகளாவில் டிஜிட்டல்மயமாக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் clout computing தொழில்நுட்பத்தின் மீதான முதலீடு பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் கட்டியெழுப்பப்பட்டு வரும் நிலையில்,தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பானது தேசிய பொருளாதார வளர்ச்சியில் தற்போது முக்கியமான ஒரு தூணாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“போட்டித்திறன் கொண்ட அபிவிருத்தியடைந்த ஒரு பொருளாதாரமாக இலங்கை தனது ஸ்தானத்தை பேணிக் கொள்ள விரும்பினால்,நாட்டிலுள்ள அறிவுமிக்க தலைமுறைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு கூடுதல் பெறுமானத்தைச் சேர்ப்பிக்கும் முகமாக,தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு அபிவிருத்தி மீது இலங்கை கவனம் செலுத்துவதற்கு இதுவே சரியான தருணம்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பத்திரிகை வெளியீடு எதிர்காலமானது முழுமையாக இணைக்கப்பட்ட, நுண்ணறிவு மிக்க உலகமாக அமையவுள்ளது என சிந்திக்கப்படுகின்ற நிலையில், இந்த எதிர்கால சூழலில் நிலைபெறுவதற்கு நிறுவனங்கள் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றென clout computing நம்புகின்றது. 

விரைவுபடுத்தப்பட்ட computing தொழில்நுட்பம்,வரையரையின்றிய தேக்குதிறன் (storage) மற்றும் நுண்ணறிவு மிக்க cloud தளமேடைகள் ஆகியன நிறுவனங்கள் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்க உதவுகின்ற முக்கியமான உந்துசக்திகளாகக் காணப்படுகின்றன.

360 இற்கும் மேற்பட்ட வழக்கமான நிறுவனங்கள்,தொழிற்துறை கூட்டணிகள் மற்றும் open source சமூகங்களுடன் தீவிரமான செயற்பாடுகளைக் கொண்ட அங்கத்தவராக Huawei திகழ்ந்து வருவதுடன்,முக்கியமான தரநிலைகளுடன் இணைந்து அது பணியாற்றுவதுடன்,பகிரப்பட்ட வெற்றிக்கான அத்திவாரத்தையும் இடுகின்றது. 

தொழிற்துறையை முன்னேற்றுவதற்காக cloud computing, software defined networking (SDN), network functions virtualization (NFV), மற்றும் 5G போன்ற வளர்ச்சி கண்டு வருகின்ற களங்களில் தொழிற்துறைப் பங்காளர்கள் புத்தாக்கங்களை முன்னெடுப்பதற்கு உதவுவதற்கு Huawei அவர்களுடன் கைகோர்த்துள்ளது.

“ஆகவே Huawei  உடன் இணைந்து செயற்படுவது,எமது பங்காளர்களுக்கும்,எமது நிறுவனத்திற்கும் பரஸ்பரம் வெற்றியளிக்கும் சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கும் வர்த்தக வாய்ப்புக்களை வெளிக்கொண்டு வருவதற்கு உதவுகின்ற கூட்டு முயற்சிகளுக்கு வழிகோலும்,” என்று ஷண்லி வோங் அவர்கள் குறிப்பிட்டார்.

Huawei இன் முழுமையான உற்பத்திகள், தீர்வுகள் மற்றும் சேவைகள் அனைத்தும் போட்டித்திறன் மற்றும் பாதுகாப்புக் கொண்டவை. 

சூழல் தொகுதி பங்காளர்களுடன் பகிரங்க ஒத்துழைப்பினை ஏற்படுத்துவதன் ஊடாக தனது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலம் நிலைக்கும் பெறுமானத்தைத் தோற்றுவிக்க நிறுவனத்தால் முடிவதுடன்,மக்களை வலுவூட்டும் பணிகள்,வீட்டு வாழ்வை செழுமைப்படுத்தல்,அனைத்து அளவு மற்றும் வகைப்பட்ட நிறுவனங்களில் புத்தாக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றையும் முன்னெடுக்க முடிகின்றது. 

வாடிக்கையாளர்களின் தேவைகள் மீது Huawei  இன் புத்தாக்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன்,உலகை முன்னேற்றுகின்ற தொழில்நுட்பவியல் ரீதியிலான கண்டுபிடிப்புக்களில் கவனம் செலுத்தியவாறு அடிப்படை ஆராய்ச்சி மீது நிறுவனம் பெருமளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

பங்காளர்களுடன் இணைந்து நிதி,எரிசக்தி,போக்குவரத்து மற்றும் உற்பத்தி போன்ற துறைகளிலுள்ள நிறுவன வாடிக்கையாளர்கள்,அரசாங்க மற்றும் பொது வசதிகளுக்கு Huawei தனது சேவைகளை வழங்கி வருகின்றது.

Huawei நிறுவனம் 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வருவதுடன்,இலங்கையிலுள்ள உச்ச தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்றது. தற்போது,இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையில் பிரதான சேவை வழங்குனராக Huawei மாறியுள்ளதுடன்,நேரடியாகவும்,மறைமுகமாகவும் 1,000 இற்கும் மேற்பட்ட தொழில்வாய்ப்புக்களையும் அது உருவாக்கியுள்ளது. 

Huawei இனால் அபிவிருத்தி செய்யப்பட்ட வலையமைப்பு இலங்கை சனத்தொகையில் 70% இற்கும் மேற்பட்டவர்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது. இலங்கையில் ஸ்மார்ட்போன்களை வழங்குவதிலும் Huawei உச்சத்தில் திகழ்ந்து வருவதுடன்,கணிசமான சங்தைப் பங்கினையும் கொண்டுள்ளது. 

அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்குனர்களுக்கும் உயர் தரமான உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குவதையிட்டு அது மிகவும் பெருமை கொள்வதுடன்,அதன் ஸ்மார்ட்போன்களுக்கு இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புக் கிடைத்துள்ளது.