(எம்.ஆர்.எம்.வஸீம்)

 அரசாங்கம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தீர்மானித்த பின்னரும் விஜேதாச ராஜபக்ஷ எந்த அடிப்படையில் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார் என்று எங்களுக்கு தெரியாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்

விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டது தொடர்பில் எங்களுக்கு எமதுவும் தெரியாது. 

அவர் எந்த நிலைப்பாட்டில் இருகின்றார் என்றும் தெரியாது. என்றாலும் அரசாங்கம் என்றவகையில் கூட்டுப்பொறுப்பை பாதுகாப்பது அவரின் கடமையாகும் என்றார்.