வெங்காயம், உருளைக்கிழங்கிற்கு வரி குறைப்பு

Published By: Vishnu

03 Dec, 2018 | 03:28 PM
image

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருழைக்கிழங்கு ஆகியவற்றுக்கான விஷேட வர்த்தக வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கிலோ ஒன்றுக்கான விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பட்டுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றுக்கான விஷேட வர்த்தக வரி 40 ரூபாவிலிருந்து 20 ரூபாவிற்கு குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்