கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த கால யுத்தம் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கள் அழிவுகள் இடப்பெயர்வுகள் என்பவற்றால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய நிலையில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் தமக்கான வீட்டுத்திட்டங்கள் கிடைக்காத நிலையில் ஒன்பது ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதனைவிட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்கனவே பல்வேறு திட்டங்களினூடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் ஏராளமான வீடுகள் அதாவது பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் விசேட தேவையுடைய குடும்பங்கள் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்கள், வருமானம் குறைந்த குடும்பங்கள் எனப் பல்வேறு தரப்பட்டவர்கள் தமக்கான வீட்டுத்திட்டங்களை நிறைவு செய்ய முடியாத நிலையில் அதாவது பாதுகாப்பற்ற வீடுகளில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்துக்கும் மேலாக கடந்த ஒன்பது  ஆண்டுகளாக மீள்குடியேறி அப்போது வழங்கப்பட்ட அல்லது அவர்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் சொல்லொணத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவர்கள் தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்தவில்லையென இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது ஆதங்கங்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.