சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நால்வருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு இளம் வயது சிறுமிகளை மாரவில பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 16 மற்றும் 19 வயதுகளையுடைய இரு இளைஞர்களுடன் அவர்களுக்கு அறைகளை வழங்கிய ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும், மாரவில மரந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஹோட்டல் பணியாளர் ஆகிய நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர்.