பணிப்பெண்ணாக குவைத் சென்ற இரு பிள்ளைகளின் தாய் மர்மமாக உயிரிழப்பு

Published By: Vishnu

03 Dec, 2018 | 01:17 PM
image

குவைத்திற்கு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்ததையடுத்து சடலம் சனிக்கிழமை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெயாங்கொடை, மாரபொல பிரதேசத்தைச் சேர்ந்த வித்தான குருப்பு ஆராச்சிகே சியாமளி (வயது 41) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில் சடலமாக அனுப்பி வைக்கப்பட்டவராவார்.

குறித்த பெண் நீண்ட காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்ணாக தொழில் செய்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி குவைத்திற்கு பணிப் பெண்ணாகச் சென்றுள்ளார்.

இந்நிலையில் தான் பணி செய்யும் வீட்டில் தனக்கு பிரச்சினை உள்ளதாகவும், தான் அங்கு கொடுமைப்படுத்தப்படுவதாகவும் அவர் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளார். 

இதையடுத்து கடந்த நவம்பர் 23 ஆம் திகதி  அன்று அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் மகன் எரங்க குமார தெரிவிக்கையில், 

எனது தாயார் தற்கொலை செய்து கொள்வதற்கு எந்தவித காரணமும் கிடையாது.  தொழில் செய்யும் வீட்டில் எனது தாயாருக்கு பிரச்சினை உள்ளது. அவரது மரணத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது. எமக்கு நீதி கிடைக்க வேண்டும்  எனத் தெரிவித்துள்ளார்.

இறந்த பெண்ணின் சகோதரன் சுசந்த குமார தெரிவிக்கையில்,

சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்  அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் பணியாற்றும் வீட்டு எஜமானி சகோதரியை தாக்கியுள்ளார் எனவும், அந்த வீட்டு எஜமானர் பொலிஸில் பணியாற்றுபவர் எனவும், தனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தனது வீட்டு எஜமானாரே பொறுப்புக் கூற வேண்டும் என்று குரல் பதிவொன்றை தொலைபேசி மூலமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணமடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04