பாக்தாத்தில் உள்ள கால்பந்து மைதானத்தினுள் தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டை வெடிக்கவைத்ததில் 65 பேர் பலியாகியுள்ள நிலையில் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று உள்ளுார் போட்டிகள் இடம்பெற்றன.

இதன்போதே தீவிரவாதி ஒருவர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் 65 பேர் பலியாகியுள்ளதாகவும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பெற்றுள்ள ஐ.எஸ்.அமைப்பு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைதாரியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.