கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த இரண்டு சிறுவர்கள் பல்வேறு தேவைப்படுகளுடன் காணப்படுகின்றனர்.

இறுதியுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் தங்கியிருந்த சமயம் குறித்த சிறுவர்கள் ஆறு வயதாக இருக்கும் போது எறிகணை வீச்சில் தமது கால்களை இழந்தனர்.

தற்போது கால்களை இழந்த நிலையில் வட்டக்கச்சி இராமநாதபும் பகுதியில் தமது பெற்றோருடன் வாழ்ந்து வருகின்ற போதும் அவர்களுக்கான தேவைப்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும் அவற்றை தீர்த்துக்கொள்ளக் கூடிய பொருளாதார வசதிகளை கொண்ட குடும்பங்களாக இவ்விரு குடும்பங்களும் இல்லாத நிலையில் அன்றாடம் கூலிவேலைகளை நம்பி வாழும் குடும்பங்களாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.