ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் 2ஆம் நிலை தலைவராகவும் நிதிஅமைச்சராகவும் இருக்கும் அப் தல் ரஹ்மான் முஸ்தபா அல் குதிலி என்பவரை சுட்டு வீழ்த்தி விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

அவரை உயிருடன் பிடிக்க முயன்றதாகவும், அது முடியாமல் போனதால் இறுதி நிமிடத்தில் சுட்டுக் கொன்றதாகவும் அமெரிக்க படைகள் தெரிவித்துள்ளன.