(நா.தினுஷா) 

கொழும்பு தொடக்கம் கதிர்காமம் மற்றும் திஸ்ஸமகாராமவினூடான மஹியங்கனை வரையிலான நீதிக்கான பாதயாத்திரை இன்று மாலை 6.30 மணியளவில் முடிவுக்கு வந்தது.  

நேற்று சனிக்கிழமை முதல் இரண்டாலாக முன்னெடுக்கப்பட்ட இப் பாதயாத்திரையானது நேற்று காலை 6.30 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட பூஜைவழிபாடுகளுடன் கொழும்பு மாநகர சபை அருகாமையில் இருந்து ஆரம்பமாகியது. 

அதன்படி நேற்று மொரட்டுவை, பாணந்துரை, களுத்தரையினூடாக பயணத்தை ஆரம்பித்த இந்த நீதிக்கான பாதயாத்திரை நேற்று மாலை 7 மணியளவில் தெவுந்தர பிரதேசததில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. 

அதன் பின்னர் மீண்டும் இன்று காலை 8.30 மணிக்கு யாத்திரையின் பயணம் ஆரம்பமாகியிருந்தது. அதற்கிணங்க தங்கலையில் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்த ஐக்கிய தேசிய முன்னணியின் நீதிக்கான பாதயாத்திரை கதிர்காமம், திஸ்ஸமகாராமை, வெல்லவாய, மொனராகலை, பிபிலவினூடாக மஹியங்கனையில் நிறைவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.