நான் அமைச்சராக இருக்கும் இந்த அரசு பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை இல்லாத அரசாகத்தான் இருக்கிறது.என அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் கூறுகையில் எங்களுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை இல்லை.

எதிர் கட்சி எல்லோரும் ஒன்றிணைந்து பெரும்பாண்மையை  வைத்திருக்கின்ரார்கள் ஆகவே எமது அரசாங்கம் செய்யவேண்டிய தேவைகளை கடமைகளை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்ள முடியாதவர்களாக  இருக்கின்றோம்.

இதுவாரைக்கும் வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வில்லை இதன் காரணமாக ஜனவரி  மாதம்  எந்தவிதமான வேலைகளையும்  செய்யமுடியாமல் போயுள்ளது.

நாடு என்ற அடிப்படையில் ஜனாதிபதியவர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் 40 நாட்கள் இந்த நாட்டினுள் பாரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது .

ஜனநாயகத்துக்கு  முரணான எந்தவொரு சொற்பாட் டையும்  செய்வதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை.ஜனாதிபதியின் தேவை சிறப்பானா ஒரு பிரதமரிடம் இந்த  நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது மட்டும்தான் .அதனால்தான் தொடர்ந்து கட்சிகளோடு  பேசியிருந்தார் .

பாராளுமன்றத்திலே எதிர் கட் சிக ள் பெரும் பண்மையை காட்டிய போதிலும் ஐ .தே க தலைவர் ரணில் விக்கிரம சிக்கவினால் பெரும்பாண்மையினை காட் ட  முடியவில்லை 

இதுவரைக்கும் 113 பேர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு ஒப்படைக்கவில்லை ரணில் அவர்களுக்கு ஆதரவாக 100 பேர்  .மட்டும்தான் உள்ளனர் என  தெரிவித்துள்ளார்