(எம்.மனோசித்ரா)

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கான பிரேரணை சபையில் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்டால் புதிய பிரதமரை நியமிக்க தயாராகவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமராக நியமிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என்ற ஐக்கிய தேசிய கட்சியின் கனவு ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை. 

அத்தோடு நாட்டில் தொடரும் நெருக்கடி நிலைமைக்கு விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வதன் மூலமே தீர்வு காணமுடியும். எனினும் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான தைரியம் ஐ.தே.க.வுக்கு இல்லை. அதனாலேயே இவ்வாறு நேரத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.