கட்டாரில் மாவனல்லையின் 'லெக்செஸ்' அணி சாம்பியன்

Published By: Vishnu

02 Dec, 2018 | 11:34 AM
image

கத்தாரில் KJC அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த “KJC Cricket Battle 2018” ன் மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டியில் சாம்பியன்சாக மாவனல்லையின் லெக்செஸ் அணி முடிசூடிக் கொண்டது. 

கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி இந்த கிரிக்கெட் தொடர் கட்டாரில் பெளண்டேஷன் கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமான இத் தொடரில் பல தலை சிறந்த அணிகளை எதிர்த்து விளையாடிய இந்த அணி சிறந்த முறையில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டது.

KJC அமைப்பானது கத்தாரில் வாழும் கிருங்கதெனிய (மாவனல்லை) சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் அமைப்பு ஆகும்.

இதன் அடிப்படையில் கட்டார் வாழ் மாவனல்லை சகோதரர்களின் சகோதரத்துவத்தை பலப்படுத்தவும் ஒற்றுமையை நிலை நிறுத்தவும் மாவனல்லையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்கு பதினோரு பேர் கொண்ட கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.

சென்ற ஆண்டைப்போலவே இவ் வாண்டும் Lexus, United, Baduriyans, Manchester United, Red Side மற்றும் Lucky Boys போன்ற சிறந்த அணிகள் பங்குபற்றியிருந்ததுடன், நூற்றுக்கும் அதிகமான கட்டார் வாழ் மாவனல்லை மக்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

மற்றும் மாவனல்லையின் தலை சிறந்த பாடசாலைகளான ஸாஹிரா கல்லூரி மற்றும் பதுரியா கல்லூரி இரண்டுக்கும் இடையிலான நட்பு ரீதியான போட்டியானது மிகவும் விறு விறுப்பாகவும் பலரினதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் இடம் பெற்றது. இதில் இரு பாடசாலைகளை சேர்ந்த கத்தார் வாழ் பழைய மாணவர்கள் தத்தமது பாடசாலைகளுக்காக களமிறங்கினர். 

இதில் பதுரியா கல்லூரி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

16ஆவது ஐபிஎல் ஆரம்பப் போட்டியில் சென்னையை...

2023-04-01 09:39:18
news-image

அவுஸ்திரேலியாவில் தினேஷுக்கு தங்கம், துலூனுக்கு வெள்ளி

2023-04-01 09:33:14
news-image

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐசிசிக்கு விளையாட்டுத்துறை...

2023-03-31 09:44:57
news-image

சம்பளம் தாமதிப்பதால் கால்பந்தாட்ட சம்மேளன ஊழியர்கள்...

2023-03-31 09:44:36
news-image

அவுஸ்திரேலிய பகிரங்க மெய்வல்லுநர் போட்டியில் தங்கத்துக்கு...

2023-03-30 16:04:18
news-image

U20 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை நடத்தும்...

2023-03-30 12:48:44
news-image

தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு...

2023-03-30 11:12:49
news-image

பழைய முறைமைப்படி 16 ஆவது ஐபிஎல்...

2023-03-29 15:18:16
news-image

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர்...

2023-03-29 14:27:18
news-image

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் -...

2023-03-29 15:20:22
news-image

DanceSport ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலக்கு பாரிஸ்...

2023-03-31 17:05:26
news-image

சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல்...

2023-03-29 11:35:41