தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்தை கைவிடப்போவதுமில்லை  எனது பதவியை இராஜினாமா செய்யப்போவதுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக நீதிமன்றம் வெளியிடும் அறிவிப்பை பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.