பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவையே ஐக்கியதேசிய கட்சி நியமித்துள்ளது என தெரிவிக்கும் கடிதமொன்றை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீர்காசிம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும்  அனுப்பிவைத்துள்ளார்.

பிரதமர் பதவிக்கு ஐக்கியதேசிய முன்னணி நியமிக்கும் எவரையும் ஏற்றுக்கொள்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளதை தொடர்ந்தே  ஹபீர்காசிம் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்

ஐக்கியதேசிய கட்சியின்  பாராளுமன்ற குழுவினர் ரணில்விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிப்பது என ஏகமனதாக தீர்மானித்துள்ளனர் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடிதம் மற்றும் இந்த கடிதத்தின் மூலம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 117 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுள்ளமை உறுதியாகியுள்ளது.