ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் பிரதேச மக்களை ஒன்றிணைந்து மக்கள் கூட்டம் ஒன்று நேற்று கினிகத்தேனை நகரில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் டபிள்யூ.எம்.ரணசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கலந்து கொண்டார்.

கினிகத்தேனை விகாரையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின் கினிகத்தேனை விகாரை மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.