“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு முன்னேற்றகரமானதக இருந்தது” என பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு 9 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அகில விராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் சந்திப்பு முன்னேற்றகரமானதாக இருந்த போதிலும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும் சந்திப்பின் தொடர்ச்சியாக ஞாயிற்றுக் கிழமை(நாளை) ஜனாதிபதியை மீண்டும் சந்திக்க போவதாகவும் அகில் தெரிவித்தார்.