ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் 200ஆவது வருட நினைவு விழா ஜனாதிபதி தலைமையில்

Published By: Daya

01 Dec, 2018 | 11:21 AM
image

ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் 200ஆவது வருட நினைவு விழா  ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது.

வெளிநாட்டு சிந்தனைகளுக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கும் ஏற்ப செயற்பட்டு, ஜோன் டொய்லி முறைமைக்கு மீண்டும் நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு முயற்சிக்கும் சில அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவது நாட்டு மக்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் 200ஆவது நினைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்துகின்றபோது எமது போராட்ட வரலாற்றிலும் ஊவா வெல்லஸ்ஸ சுதந்திரப் போராட்டத்தின் கடந்த கால நினைவுக் குறிப்புகளுடன், நாட்டின் அனைத்து மக்களும் தாய்நாட்டுக்காக தேசாபிமானத்துடன் எழுந்திருக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜோன் டொய்லிகளுக்கு பதாகைகளை ஏந்தும் சமூகமொன்று இன்னும் இந்த நாட்டில் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசப்பற்றுடையவர்களுக்கும் தேசத்துரோகிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை எதிர்கால தலைமுறைக்கும் மக்களுக்கும் விளக்கிக்கூற நாட்டின் அனைத்து கல்விமான்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

களனி பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் பிரிவும் ஜனாதிபதி அலுவலகமும் இணைந்து இந்த நினைவு தின விழாவை ஏற்பாடு செய்திருந்ததுடன், ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்திற்கு 200 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு தபால் முத்திரையொன்றும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.

“1818 ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் நினைவு தின மலர்” ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.

மேலும் ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்த தேசிய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களான ஜினதாச பதிரன, முனிதாச புஞ்சிஹேவா ஆகியோருக்கு ஜனாதிபதியினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

களனி பல்கலைக்கழத்தின் உபவேந்தர் பேராசிரியர் டீ.எம்.சேமசிங்ஹவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள், பல்கலைக்கழக உபவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34