பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவரினது வழக்கை கொழும்பு மேல் நீதி மன்றம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சட்டவிரோதமாக 30 மில்லியன் ரூபா நிதியை நிறுவனமொன்றில் முதலீடு செய்தமை தொடர்பாக குறித்த அறுவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே கொழும்பு மேல் நீதி மன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி வழக்கை ஒத்தி வைத்தார்.

பிரதிவாதிகள் தரப்பின் சிரேஷ்ட வழக்கறிஞர்கள் மற்றுமொரு வழக்கு விசாரணையில் ஆஜராகியுள்ளமையால் குறித்த வழக்கை ஒத்தி வைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இவ் வழக்கு எதிர் வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.