தற்போது தெற்காசியா முழுமைக்கும் Hantavirus Pulmanory Syndrome என்ற நோய் பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

எலி, பெருச்சாளி போன்றவற்றால் இத்தகைய வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் நுழைவதாகவும், இந்த வைரஸ் கிருமி காற்றில் பரவும் தன்மைக் கொண்டதால் எலிகளையும், பெருச்சாளிகளையும் அதன் நடமாட்டத்தை கண்காணிக்கவேண்டும். பெரும்பாலும் எலிகளின் சிறுநீரில் இருந்து தான் இத்தகைய வைரஸ் கிருமிகள் உற்பத்தியாவதாகவும், அவை காற்றின் மூலம் பரவி மனிதர்களையும் வந்தடைகிறது என்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு ஆண்டுதோறும் நாற்பது சதவீதத்தினர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய நோய் தாக்கினால் அவர்களின் நுரையீரல், சிறுநீரகம், இதயம் போன்ற பகுதிகள் முதலில் பாதிக்கப்பட்டு, இறுதியில் மரணத்தை ஏற்படுத்தி விடும். இதற்கு தற்போது வரை தடுப்பூசிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இத்தகைய வைரஸ் கிருமி இருப்பதை 1993 ஆம் ஆண்டில் தான் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நோய்களின் அறிகுறியாக சோர்வு, காய்ச்சல், தசை வலி, ஒரு வார காலம் வரையிலான மூச்சு வாங்குதல் மற்றும் சுவாச கோளாறு இருந்தால் இத்தகைய நோயின் அறிகுறியாக இருக்குமா? என்பதை பரிசோதனைகளின் மூலம் உறுதிப் படுத்திக்கொள்ளவேண்டும்.

தற்போது இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகுபவர்களுக்கு ஓக்ஸிஜன் தெரபி என்ற சிகிச்சையை வழங்கி நிவாரணமளித்து வருகிறார்கள். சிலருக்கு இரத்தவோட்டத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கான திரவ மாற்று சிகிச்சை போன்றவற்றை மேற்கொண்டு இதிலிருந்து காப்பாற்றுகிறார்கள்.