பயாகலை  முதல் மக்கொனை வரையான கடல் எல்லையில் கடல் அலையின் வேகம் அதிகரித்திருப்பதனால் இப்பகுதியில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பயாகலைப் பொலிஸார் பொது மக்களைக் கேட்டுள்ளனர். 

கடந்த 22 ஆம் திகதிக்குப் பின்னர் இப்பகுதி கடலில் நீராடிய  இரு இளைஞர்கள் மக்கொனை, பயாகலைப்  பகுதிகளில் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர். 

தென்பகுதிக்கு சுற்றுலா செல்வோர் கடலில் நீராடும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுள்ளனர். 

(பேருவளை நிருபர்)