பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி காலை 10.30 வரை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்தி வைத்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போது, ஐக்கிய தேசிய முன்னணியினால் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான நிதியை ரத்து செய்வதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இதன் பின்னர் இப் பிரேரணை மீதான விவாதங்கள் இடம்பெற்று இறுதியில் 122 பெரும்பான்மை வாக்குகளுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து சபாநாயகர் பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி 10.30 மணிவரை ஒத்தி‍ வைத்தார்.

இதே‍வேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.