இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இதன் விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு இன்னிங்ஸும் தலா 100 பந்துகளை கொண்டதாக இருக்கும். அத்துடன் ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை மாறும். 

ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து அல்லது 10 பந்துகளை பறிமாற்றம் செய்வதுடன் ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 20 பந்துகளை பறிமாற்றம் செய்யலாம். 

அத்துடன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இப் போட்டி முறையானது அறிமுகப்படுத்தப்படும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.