அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் சீரற்ற காலநிலையால் குறித்த பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. 

கடந்த 24 ஆம் திகதி உருவான காட்டுத்தீ அங்கு நிலவி வரும் வறட்சியான காலநிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்று ஆகியவற்றால் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

தொடர்ந்து பரவி வரும் குறித்த தீயால் 22 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. 

இதனால் அந்த பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் காட்டுத்தீ பரவிவரும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த நூற்றூக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் அங்கு நிலவி வரும் சீரற்ற வானிலையால் குறித்த பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வருவதாக அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.