(நா.தினுஷா) 

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக மக்களை அணித்திரட்டும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி முன்னெடுக்கும் நீதிக்கான யாத்திரை நாளை மறுதினம் சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.இந்த பேரணி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையயில் ஆரம்பிக்கப்பட்டு பாரிய வாகன ஊர்வலமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும்.  

சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் கொழும்பு மாநகர சபையின் அருகில் இருந்து ஆரம்பமாகும் இந்த பேரணியில் பல்லாயிரம் கணக்கான வாகனங்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. 

திஸ்ஸமகாராமையில் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பின் பின்னர் வெள்ளவாய, புத்தளம், மொணராகலை பிபில ஊடாக மஹியங்கனையில் நிறைவுக்கு வரும். 

19 ஆம் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் பிரகாரம் பிரதமரை பதவிநீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. 

நாட்டில் பிரதமர தெரிவு, பதவி நீக்கம், பாராளுமன்றத்தை கலைத்தல், உட்டபட அதிகாரங்கள் பாராளமன்ற பெருப்மான்மையின் அடிப்படையில் பாராளுமன்றமே அதனை தீர்மானிப்பதுடன் நிதி பயன்பாடு தெடர்பாக தீர்மானிக்க உரிமையும் பாராளுமன்றத்துக்கே காணப்படுகின்றது. 

ஆகவே ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து உத்தியோக பூர்வமாக பதிவி நீக்கபட வில்லை. 

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினுடாக நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் மீறி செயற்பட முடியாது.

நீதிக்கு புரம்பான அரசியலமைப்பை மதிக்காத இந்த செயற்பாட்டினை மக்கள் பலத்திலேயே மாற்றியமைக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.