(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தராஜபக்ஷ மற்றும் ரணில்விக்ரமசிங்க ஆகிய மூவருக்குமே நாட்டை ஆட்சி செய்வதற்கான எந்த தகுதியும் கிடையாது என சிறந்த அரசியல் கலாசாரத்திற்கான இளைஞர் அமைப்பு தெரிவித்துள்ளது.  நாட்டின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதோடு, அரசியலமைப்பிற்கு முரணாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். வெகு விரைவில் இவற்றுக்கான பொறுப்பு கூற வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மஹிந்தராஜபக்ஷ தன்பக்க தவறுகளை உணர்ந்து அவற்றின்படி செயற்பட வேண்டும். திருடர்களுடன் கூட்டணிந்து ஆட்சி அமைக்க முடியும் என ரணில்விக்ரமசிங்க நினைத்துக் கொண்டிருந்தார். 

ஆனால் அவ்வாறு செயற்பட்டால் அதன் பலன் என்ன என்பதை அவர் தற்போது புரிந்துகொண்டுள்ளார். 

எனவே திருடர்களுடன் நட்பு வைத்திருக்கும் அவருக்கும் நாட்டை ஆட்சி செயற்வதற்கான தகுதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.