சுவீடனிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விமானமொன்று கட்டடத்தின்  மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தின் போது விமானத்தில் 179 பயணிகளும் 6 விமானப் பணிப்பெண்களும் இருந்துள்ளனர்.

விமானம் டெர்மினில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக புறப்பட்டதைத் தொடர்ந்து விமானி சற்று வேகமான விமானத்தை இயக்க ஆரம்பித்தார். 

இதன்போது விமானம் ஓடுபதையை விட்டு சற்று விலகி ஓட ஆரம்பிக்க அருகில் இருந்த கட்டடத்தில் விமானத்தின் இடது பக்க இறக்கை மோதி விபத்துக்குள்ளானது. 

இதனால் விமானம் குலுங்கியதுடன் அதிர்ஷ்டவசமாக விமானி அந்த விமானத்தை உடனடியாக கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் பிழைத்தனர்.

விமானம் கட்டடத்தில் மோதியதற்கு காரணம் என்ன என்பது பற்றி சுவீடன் நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் சம்பவம் இடம்பெற்று சில மணி நேரத்திற்கு பிறகு பயணிகள் பாதுகாப்பாக பிறிதொரு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.