ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த ரோக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.

அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 

44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் 230.4 டன் எடை கொண்டதாகும்.

இவ்வாறு விண்ணுக்கு செலுத்தப்பட்ட ரொக்கெட்களில் இது 45-வது பி.எஸ்.எல்.வி. ரொக்கெட்  ஆகும்.

இதற்கான இறுதிக்கட்ட பணியான 28 மணி நேர காலஅவகாசம் நேற்று காலை 5.57 மணிக்கு தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.