கிழக்கு மாகாணத்தில் 'கடற்கரை கரப்பந்து' (Beach Volleyball) விளையாட்டினை பிரபல்லியப்படுத்தும் செயற்றிட்டத்திற்கமைவாக 'கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக் கிண்ணம் -2018' போட்டிகள் இன்று  அட்டாளைச்சேனை பீச் பாா்க்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக  விளையாட்டு திணைணக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ் மாகாண சுற்றுலா பயணிகள் அதிகாரசபையின் அனுசரனையுடன், விளையாட்டுத் திணைக்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினையும், விளையாட்டுத் துறையினையும் மேம்படுத்தும் பொருட்டு இவ் கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

மாகாணத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள் கலந்துகொள்வதுடன், சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களும் இதில் கலந்துகொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படட்டுள்ளதாக விளையாட்டு திணைணக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் மேலும் தெரிவித்தார்.