நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ஜோஹன் கிரப், நுரையீரல் புற்றுநோய் காரணமாக பார்சிலோனோ நகரில் நேற்று  தனது 68 ஆவது வயதிதில் மரணம் அடைந்தார். 

உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 3 முறை பெற்றவர் ஜோஹன் கிரப். இவரது தலைமையிலான நெதர்லாந்து அணி 1974 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருந்தது.