டயலொக் கிண்ண றகர் போட் டித் தொடரில் முத­லா­வது போட்­டி­ யிலே நடப்புச் சம்­பியன் பிர­பல கண்டி அணி அமோக வெற்றி பெற்­றது.

நேற்று கண்டி நித்­த­வலை மைதா­னத்தில் நடை­பெற்ற சீ.எச்.என்.எப்.சீ அணி­யு­ட­னான போட்­டியில் இலங்கை தேசிய அணியின் தலைவர் பாசில் மரீஜா தலை­மை­யி­லான கண்டி அணி 80– -03 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்றி பெற்­றது.


போட்டி ஆரம்­பித்த முத­லா­வது நிமி­டத்­திலே கண்டி அணி வீரர் ஒருவர் இழைத்த தவறு கார­ண­மாக சீ.எச்.அணிக்கு வழங்­கப்­பட்ட பெனால்­டி யை சீ.எச். வீரர் ஜனித் சத்­து­ரங்க மிக இல­கு­வாக போட்­ட­தனால் 03-–00 என்ற அடிப்­ப­டையில் சீ.எச் முத­லா­வது புள்­ளியைப் பதிவு செய்­தது. சீ.எச். அணி பெற்ற முத­லா­வதும் இறு­தி­யு­மா­ன­து­மான புள்­ளியே மேற்­படி புள்­ளி­யாகும்.

அதன் பிறகு சீ.எச். அணிக்கு எந்த ஒரு புள்­ளி­யையும் பெற கண்டி அணி வீரர்கள் இடம் கொடுக்க வில்லை. போட்­டியில் கண்டி அணி மொத்தம் 14 ட்ரைகளை ஒன்றன் பின் ஒன்­றாக வைத்­தது. அதில் 5 ட்ரைகளை கோலாக மாற்­றி­யதால் மொத்தம் 80 புள்­ளி­ களைப் பெற்றுக் கொண்டது.

போட்டி முடிவில் 80–3 என்ற அடிப்படை யில் கண்டி அமோக வெற்றி ஈட்டியது.