ஆளுந் தரப்பினர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று காலையில் இடம்பெற்ற ஆளுந்தரப்பினரின் பாராளுமன்ற குழுக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

இதே வேளை இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.