ராஜ­பக் ஷ கர்ச்­சிப்­ப­தாலோ ரணில் முன­கு­வ­த­னாலோ பொருளாதார நெருக்­க­டியை வெற்றிகொள்ள முடி­யாது

Published By: Robert

25 Mar, 2016 | 10:01 AM
image

இன்று பிறந்த குழந்தை முதல் வயோ­திபர் உட்­பட அனை­வரும் 5 இலட்­சத்து 25 ஆயிரம் ரூபா கடன்­கா­ரர்­க­ளாக இருக்­கின்­றார்கள் என ஜே.வி.பி.யின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அனுர குமார திஸா­நா­யக்க சபையில் தெரி­வித்தார்.

ராஜ­பக் ஷ கர்ச்­சிப்­ப­த­னாலோ ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன­கு­வ­த­னாலோ பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு தீர்­வினைப் பெற்றுக் கொள்ள முடி­யாது. எமது நாட்­டுக்கு ஏற்ற பொரு­ளா­தாரக் கொள்­கை­களை வகுத்துக் கொள்ள வேண்­டு­மெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

நேற்று முன்தினம் புதன்­கி­ழமை நடந்த பாரா­ளு­மன்ற அமர்­வின்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போது நாட்டின் பொரு­ளா­தாரம் தொடர்­பாக ஆற்­றிய உரை மீது சபை ஒத்­தி­வைப்பு வேளை மீதான பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

நாம் 2016 ஆம் ஆண்டில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் இன்­றிய நிலை­மையே உள்­ளது. வரவு – செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அதில் பல திருத்­தங்கள் செய்­யப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது.

பல தேவைகள் உள்­ள­டக்­கப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. ஆகவே 2016 ஆம் ஆண்டு திட்­ட­மிட்ட வரவு – செல வுத் திட்ட அறிக்­கை­யொன்று இல்­லாத நிலைமை காணப்­ப­டு­வது ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கின்­றது. இந்த ஆண்டு கடந்த ஆட்­சி­யா­ளர் ­களை காரணம் காட்டி பல்­வேறு குறை­பா­டு­க­ளையும் குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முன்­வைத்துக் கொள்ள முடியும். ஆனால் அடுத்த ஆண்டு இவ்­வாறு கூறிக் கொண்டு இருக்க முடி­யாது. கடந்த காலங்­களில் பல அனு­ப­வங்­களைக் கொண்­டி­ருக்­கின்றோம். மூடி மறைக்­கப்­பட்ட தக­வல்கள் நிச்­ச­ய­மாக வெளி­வ­ரு­வதைத் தடுக்க முடி­யாது.

தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் தூர­நோக்க கொண்ட செயற்­றிட்டம் இல்லை என்­பது வெளி­யா­கி­விட்­டது. இவ்­வா­றான நிலையில் 5.3 சத­வீத பொரு­ளா­தார வளர்ச்­சியை எவ்­வாறு அடைய முடியும். கடந்த மூன்று மாதங்­களில் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி 2.5 சத­வீ­த­மாக காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் எம்­மிடம் பொருத்­த­மான தீர்­மா­னங்கள் இன்றி எவ்­வாறு இலக்கு நோக்கி பய­ணிக்க முடியும். கடந்த காலங்­களில் கப்ரால் மற்றும் பீ.பி.யின் மந்­தி­ரங்கள் தற்­போ­தைய நிலை­மையை ஏற் ­ப­டுத்­தி­யுள்­ளன. அவர்கள் பிழை­யான தக­வல்­களை முன்­வைத்­தார்கள். இன்றும் அதே­நி­லை­மையே நீடிக்­கி­றது. பொரு­ளா­தார பர­வ­லாக்­கத்தை பார்க்­கையில் 41.8 சத­வீ­த­மாக மேல் மாகா­ணத்தில் காணப்­படும் பொரு­ளா­தாரம் வட­மா­கா­ணத்தில் 3.8 சத­வீதம் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு காணப்­ப­டு­வ­தனால் பல பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அடுத்து பொரு­ளா­தார வளர்ச்சி வீதத்­தினை எடுத்துக் கொண்டால் சேவைத்­து­றையில் காணப்­படும் குறை­பா­டு­களில் வீழ்ச்சி நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்று ஏற்­று­மதி வரு­மா­னமும் வெகு­வாக குறைந்­துள்­ளது. மொத்த தேசிய உற்­பத்­தியில் பல்­வேறு பிரச்­சி­னைகள் காண ப்­ப­டு­கின்­றன.

கடந்த காலத்தில் மரக்­கறி உண்­ப­வர்­க­ளுக்கு கோழிக் குஞ்­சு­களை பஷில் ராஜ­பக் ஷ வழங்­கினார். அவர்கள் வீட்டுத் தோட்­டத்தை முன்­னெ­டுக்க முயன்­ற­போது அதற்­கான அங்­கீ­கா­ரத்தை வழங்­க­வில்லை. இவ்­வா­றுதான் கடந்த காலம் இருந்­தது. இதனால் தான் வறுமை, இழப்­புகள் என அனைத்­துக்கும் உற்­பத்­தி­யா­ளர்கள் முகங் கொடுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட் ­டது.

உற்­பத்­தியை ஊக்­கு­விப்­ப­தற்­கான மானி­யங்கள் வழங்­கப்­பட வேண்டும். கைத் ­தொழில் துறையை ஊக்­கு­விப்­ப­தற்­கான மானி­யங்கள் வழங்­கப்­பட வேண்டும். உற்­பத்­தி­க­ளுக்கு மானி­யங்கள் வழங்­கு­வதை இடை நிறுத்­து­வதால் நுகர்­வோர்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்­பதை இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன்.

ஆகவே எமது நாட்டில் காணப்­படும் வளங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட துறை­களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது நாட்டில் அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியாது. இதேபோன்றுதான் ஏனைய நாடுகளும் காணப்படுகின்றன. இதனாலேயே உலக சந்தையில் அனைத்து நாடுகளும் தொடர்பை கொண்டிருக்கின்றன. அவ்வாறு நிலைமைகள் காணப்படுகையில் ராஜ­பக் ஷ கர்ச்சிப்பதனாலோ ரணில் விக்கிரமசிங்க முனகுவதனாலோ பொரு ளாதார நெருக்கடிகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது.

தற்போதைய நிலையில் கடன் சுமை என்ற வண்டியின் சாரதியை மாற்றுவதால் எந்த பயனுமில்லை. அதாவது புகையிரத த்தில் பயணித்த குடும்பத்தினர் இறங்கியுள்ள போதும் அதே புகையிரதத்தில் அதே பாதை யில் ரோயல் பாடசாலைத் தரப்பினர் பயணி க்கின்றார்கள். ஆகவே தான் பொது மக்கள் ஆட்சியாளர்கள் மாறியுள்ளபோதும் மாற்றம் ஏற்படவில்லை என்ற சிந்தனைக்குள் சென் றுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14