சமிக்ஞை படையணியின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி தலைமையில் 

Published By: Vishnu

28 Nov, 2018 | 05:08 PM
image

இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெறும் சர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

“இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர்முறை” என்ற கருப்பொருளின் கீழ் இந்த சர்வதேச மாநாடு, தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கண்காட்சியுடன் இணைந்ததாக இன்றும் நாளையும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகிறது.

இலங்கை இராணுவத்தின் பழைமை வாய்ந்த படையணிகளுள் ஒன்றான சமிக்ஞை படையணி, இணைந்த சமிக்ஞை பிரிவுகள், தகவல் தொழிநுட்ப படை பிரிவு, திருத்தம் மற்றும் பராமரிப்புப் பிரிவு, இணைய பாதுகாப்பு படை பிரிவு, இலத்திரணியல் சமிக்ஞை பயிற்சி பாடசாலை போன்ற பல பிரிவுகளுடன் பலம் வாய்ந்ததொரு கட்டமைப்பாக செயற்படுகின்றது.

இந்த படைப்பிரிவின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் இந்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சிக்கு இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான். பங்களாதேஷ் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினர் அல்லாத சர்வதேச தகவல் தொழிநுட்பவியலாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

தகவல் தொழிநுட்ப கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டார். 

இதன்போது முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனக்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவினால் விசேட நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முப்படைகளின் தளபதி, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27