சபரிமலை கோவிலில் பொலிஸாரால் பிறப்பிக்கபட்ட தன்னிச்சியான கட்டுப்பாடுகள் அனைத்திற்கும் தடை விதித்து கேரள  உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.பொலிஸாரால் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் பக்த்தர்களுக்கு பெறும் சிரமங்களை ஏற்படுத்துவதாக கேரள உயர் நீதி மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு சபரிமலையில் எந்த விதமான போராட்டங்களோ,ஆர்ப்பாட்டங்களோ நடத்தப்பட வேண்டாம் என உயர் நீதி மன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பொலிஸாரினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினால் பக்தர்களின் வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன்,பொலிஸாரினால் பலர் கைது செய்து செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கின் தீர்பிலேயே உயர் நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.